Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Avasaram Vivek, Avasaram!
Avasaram Vivek, Avasaram!
Avasaram Vivek, Avasaram!
Ebook158 pages57 minutes

Avasaram Vivek, Avasaram!

Rating: 3.5 out of 5 stars

3.5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Avasaram Vivek, Avasaram!

Read more from Rajeshkumar

Related to Avasaram Vivek, Avasaram!

Related ebooks

Related categories

Reviews for Avasaram Vivek, Avasaram!

Rating: 3.5555555555555554 out of 5 stars
3.5/5

9 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Avasaram Vivek, Avasaram! - Rajeshkumar

    26

    1

    அந்த நாளின் முற்பகல் நேரத்தில் - ஒரு வார இதழில் மும்முரமாய் இருந்த விவேக் திடீரென்று ஹைய்யா என்றான். இடம் கேரள மாவட்டத்தில் உள்ள கோவளம் ‘ஸீ வேவ்ஸ்’ ஹோட்டல். அறை எண் 104.

    எதிர் நாற்காலியில் உட்கார்ந்து சதுர ஜன்னலுக்கு வெளியே - கெட்டியான நீலநிறத்தில் அசையும் சமுத்திரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ரூபலா திரும்பினாள்.

    என்ன ஹைய்யா..?

    கண்டு பிடிச்சுட்டேன்...

    எதை..?

    இது அனுராதாவோட உதடுதானே..? கேட்டுக் கொண்டே வார இதழின் ஒரு பக்கத்தை ரூபலாவிடம் திருப்பிக் காட்டினான். ரூபலா பார்த்தாள். இரண்டு உதடுகளை வெட்டி பக்கம் பூராவும் பிரசுரித்து விட்டு - ‘இது ஒரு நடிகையின் உதடுகள். கண்டு பிடித்து விட்டால் நீங்கள்தான் அதி புத்திசாலி. கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்!’ -

    ரூபலா புன்னகைத்தாள்.

    இவ்வளவு பெரிய உண்மையை எப்படிங்க கண்டுபிடிச்சீங்க..?

    சுலபம்...

    எப்படி..?

    ‘தெரியாவிட்டால் முப்பத்திரெண்டாம் பக்கம் பார்க்க’ என்று சொல்லியிருந்தான். நான் அந்தப் பக்கத்தைத் திருப்பிப் பார்த்து கண்டு பிடிச்சுட்டேன்...

    இந்த ஒரு மாசத்துல நீங்க ரொம்பவும் சோம்பேறியாயிட்டீங்க...! ‘கொலை வள்ளல்’ கேஸை கண்டுபிடிச்ச பின்னாடி - டிபார்ட்மெண்ட் நீங்க புதுசா கல்யாணமானவர்ங்கிற பரிதாபத்துல ஒரு மாசம் லீவு கொடுத்தது மகா தப்பு. உங்க மூளையோட கூர்மையே மழுங்கிப் போச்சு... கேவலம்! இந்த உதடுகள் யாரோடதுன்னு முப்பத்தி ரெண்டாம் பக்கத்தைப் பார்த்துதானா நீங்க கண்டு பிடிக்கணும்..? ஸேம்... ஸேம்... போலீஸ் டிபார்ட்மெண்ட்டுக்கே ஸேம்... ரூபலா சொல்லிக் கொண்டிருக்கும்போதே - டொக்... டொக்...

    அறைக் கதவை யாரோ தட்டினார்கள்.

    விவேக் ஒரு அவசர சோம்பல் முறித்து விட்டுப் போய் - கதவைத் திறந்தான். பேரர் முழு யூனிபார்மில் பிரகாசமாய் நின்றிருந்தான்.

    என்ன பேரர்..?

    ஸார்... உங்களுக்கு மெட்ராஸிலிருந்து போன் கால்...

    எக்ஸ்டென்ஷன் தான் இருக்கே...? ரூமுக்கே கனெக்ஷன் தர வேண்டியது தானே..? நான் வேற கீழே இறங்கி வரணுமா..? - விவேக் சலித்துக் கொண்டான்.

    ஸாரி ஸார்... கரண்ட் பெய்லியர்...

    வர்றேன்... நீங்க போங்க... என்றவன், அறைக்குள் எட்டிப் பார்த்து ரூபலா என்றான்.

    என்ன மெட்ராஸ் காலா? போயிட்டு வாங்க... அநேகமா மிஸ்டர் கோகுல்நாத்தான் பேசுவார்...

    எப்படி சொல்றே..?

    அவர்க்குத்தானே... நாம கோவளத்துக்கு ஹனிமூன் வந்திருக்கிற விஷயம் தெரியும்..? வேற யார்கிட்டேயும் நாம சொல்லலையே..?

    கேஸ் வந்திருக்கும்...

    என்ன... கேஸ் வந்தாலும் ஒரு மாசத்துக்கு கூப்பிட மாட்டேன்னு சொன்னாரே? விவேக் சிரித்தான். அவர் கொடுத்த ஒரு மாசக் கெடு நேத்து ராத்திரியோட முடிஞ்சுது ரூபலா... அதான் மனுஷன் தைரியமா போன் பண்ணியிருக்கார்... பார்த்துட்டு வர்றேன்...

    சொன்ன விவேக் ஓட்டமும் நடையுமாய் - கீழே இருந்த ரிசப்ஷன் கௌண்ட்டர்க்கு இறங்கிப் போனான். சிவப்பு வெல்வெட் வேய்ந்த - மேஜையின் மேல் ரிஸீவர் நோயாளிக் குழந்தை மாதிரி ஒருக்களித்து படுத்திருந்தது.

    வேகமாய் - போய் ரிஸீவரை எடுத்து காதுக்குக் கொடுத்தான்.

    ஹலோ...

    விவேக்! நான் கோகுல்நாத்... இரைந்து கத்தினார்.

    என்ன கோகுல்நாத்... சொல்லுங்க...

    நீங்க உடனடியா மெட்ராஸ் வரணும்... அவசரம்...

    என்ன விஷயம்..?

    போன்ல வேண்டாம்... விவேக்... நேர்ல வாங்க... ப்ளைட்டை புடிச்சா ரெண்டு மணி நேரத்துல நீங்க வந்துட முடியும்ன்னு நினைக்கிறேன்...

    முடியும்...

    ப்ளீஸ் சீக்கிரமா வாங்க... கமிஷனர் ஈஸ் அவெய்டிங்... கோகுல்நாத் ரிஸீவரை வைத்து விட - விவேக் நெற்றியைத் தட்டிக் கொண்டே மாடிப்படி ஏறி தன் அறைக்குப் போனான். கதவைத் திறக்கும் போதே - கட்டிலில் சூட்கேஸைத் திறந்து வைத்துக் கொண்டு - ட்ரஸ்ஸை மடித்து உள்ளே அடுக்கிக் கொண்டிருந்த ரூபலா தெரிந்தாள். சிரித்தாள்.

    மெட்ராஸ் புறப்படறோம்... அப்படித் தானே..?

    ஆமா...

    நான் ரெடி...

    விவேக் ரூபலாவையே பார்த்தான். சரியான முறைப்பு.

    என்ன பார்க்கறீங்க..?

    எனக்கொரு மகன் பொறந்தா..

    பொறந்தா..?

    அவனை..

    அவனை போலீஸ் டிபார்ட்மெண்ட்ல சேர்க்க மாட்டீங்களா..?

    சேர்ப்பேன்... ஆனா...

    ஆனா என்ன..?

    அவனுக்கு கல்யாணம் மாத்திரம் பண்ணி வெக்க மாட்டேன்... அப்படியே பண்ணி வெச்சாலும் உன்னை மாதிரி - புருஷனை உத்யோகத்துக்கு விரட்டற - பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேன்...

    விவேக் சொல்ல - ரூபலா சிரித்தாள்.

    2

    சென்னை.

    கிண்டி பூங்காவின் மரங்கள் அடர்ந்த பின்புறம்.

    மத்தியானம் ஒரு மணி பத்து நிமிடம்.

    விவேக்கின் பைக்கைப் பார்த்ததுமே - ஜனக் கும்பலுக்கு மத்தியிலிருந்த கோகுல்நாத் ஓடி வந்தார். நிறைய களைத்திருந்தார். சென்னை வெய்யில் அவருடைய யூனிபார்மை எக்கச்சக்கமாய் நனைத்திருந்தது.

    வாங்க... விவேக்... ஸ்டேஷனுக்கு போயிட்டா வர்றீங்க..?

    ஆமா...

    ப்ளைட் சரியான நேரத்துக்கு கிடைச்சுதா..?

    திருவனந்தபுரத்தில் இருந்து சரியான நேரத்துக்கு வந்துட்டேன்... என்ன கோகுல்நாத். சரியா ஒரு மாசம் வாய்தா குடுத்துட்டு - அந்த ஒரு மாசம் முடிஞ்ச மறுநாளே போன் பண்ணிட்டீங்க...

    வேற வழியில்லை விவேக்... கேஸ் கொஞ்சம் சிக்கல்.

    ஆணா..? பொண்ணா..?

    ஆண்...

    பாடி எங்கே?

    வாங்க போகலாம்...

    சுற்றிலும் ஜனக் கும்பல் திட்டுத் திட்டாய் உறைந்து போய் நின்றிருக்க - செடி கொடிகள் அடர்ந்த நிழலான ஒற்றையடிப் பாதையில் ஒரு இருபது மீட்டர் தூரம் நடந்தார்கள். காக்கி யூனிபார்ம்களுக்கு மத்தியில் - வெள்ளை விரிப்பால் முழுசாய் போர்த்தப்பட்ட ‘அது’ தெரிந்தது. கூடவே விவேக்குக்கு பரிச்சயமான அந்த கெட்ட நாற்றம். நாற்றம் அடித்த தினுசிலிருந்தே - ‘அது’ இரண்டு நாட்களாகி விட்டது என்பதை உணர்ந்தான்.

    கோகுல்நாத் ஒரு கான்ஸ்டபிளுக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1