Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Avar Enakku Mattumalla
Avar Enakku Mattumalla
Avar Enakku Mattumalla
Ebook157 pages57 minutes

Avar Enakku Mattumalla

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மராத்தியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் திருமதி ஹம்சா தனகோபால் தமிழை தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார். எண்ணில் அடங்கா புதினங்களையும், சிறுகதை தொகுப்புக்களையும் படைத்துள்ள இவர் இரண்டு கவிதை தொகுப்புக்களுக்கும் உரியவர். இவருடைய புதினங்களை ஆய்வு செய்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளையும் பெண் சிசு கொலையை வன்மையாக கண்டித்தும் எழுதியுள்ளார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் விதமாய் "அன்று ஒரு நாள் " என்ற புதினத்தை படைத்துள்ளார். இந்த புதினத்திற்கான அணிந்துரையை அழகுப்படுத்தியவர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள்..

மத்திய அரசின் "பாஷா பாரதி சம்மான்" விருது, ரஷ்யா புஷ்கின் இலக்கிய விருது, தமிழக சிறந்த நூலாசிரியருக்கான விருது எனபற்பல விருது பெற்றுள்ள இவர் அண்மையில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான தமிழ் நாடு அரசின் "அம்மா இலக்கிய விருது - 2016" பெற்றது இவருக்கு தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்துவம் அளிக்கிறது.

நாற்பது ஆண்டுகளாய் தொடரும் இவரது எழுத்துப்பணி சமூக உயர்வுக்காக மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580114204123
Avar Enakku Mattumalla

Read more from Hamsa Dhanagopal

Related to Avar Enakku Mattumalla

Related ebooks

Reviews for Avar Enakku Mattumalla

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Avar Enakku Mattumalla - Hamsa Dhanagopal

    http://www.pustaka.co.in

    அவர் எனக்கு மட்டுமல்ல

    Avar Enakku Mattumalla

    Author:

    ஹம்சா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For more books

    http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    1

    'கட் அடிப்போம், கட் அடிப்போம் காலேஜுக்கு; காதலிப்போம் காதலிப்போம் மேரேஜுக்கு' - அந்த விடலைக் கும்பல் ஜால்ரா, மௌத் ஆர்கன், புளுட் சகிதமாய் இசைத்தபடி இவர்களை வேடிக்கைப் பார்க்கிறது.

    இளம் பெண்கள் சுற்றும் இடங்களில் எல்லாம் பின் தொடர, பெண்களாக மட்டுமே தனியாய் வந்திருந்தவர்கள் சங்கடத்திற்குள்ளாகி எரிச்சலடைகிறார்கள்.

    அர்ச்சனா, ஜீவாவுடன் வந்திருந்த ஜனணி, சே. நாம அனிமல்ஸைப் பார்க்க வந்தா, கூண்டுக்குள்ளயிருக்கிறதெல்லாம் மனுசங்கப்பா. வெளிய சுத்தற இதுங்கத்தான் ஒரிஜனல் அனிமல்ஸ். என்று குரலை அடக்கிச் சொல்கிறாள்.

    ஏம்பா, நீதான் கைவசம் ஐடியா வச்சிருப்பியே, இதை ஓட்ட ஏதாவது டைப்பிஸ்ட் அர்ச்சனா ஆர்வமாய்ச் சொல்கிறாள்.

    டெலிபோன் ஆபரேட்டரான ஜீவா, நாம ஹாலிடேஸ் என்ஜாய் பண்ண வந்தா, இதுங்க நம்மள சுத்துதே. வேணாம்டி ஜனனி, அதுங்க பார்வை சரியில்ல. வம்பில மாட்டிக்காதே. நடுங்குகிறாள்.

    ஜனனி நகத்தைக் கடித்தபடி சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து யோசிக்க, அவள் இருபுறமும் அர்ச்சனாவும் ஷீலாவும் ஆர்வமாய் அவளைப் பார்க்கிறார்கள்.

    அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் பெண்கள் கூட்டம், குடும்பமாக வந்தவர்கள் இயற்கை உபாதைப் பக்கம் போய்க் கொண்டிருக்கிறார்கள். ஆக எல்லோருக்குமே இந்த இசைக்குழு கொஞ்சம் அசௌகரியத்தைக் கொடுக்கிறது.

    குழந்தைகள், கூண்டினுள் பரிதாபமாய்ப் படுத்திருக்கும் முயல்களையும், புறாக்களையும் சுற்றி வருகிறார்கள்.

    அந்த விடலைகள் சரியான கல்வி அறிவோ வயதோ அற்ற ரெண்டும் கெட்டான்கள். நிலவைப் பிடித்து வந்து பெண்ணாய்ப் படைத்தது போல இருக்கும் ஜனனி போன இடமெல்லாம் சுற்றினதில் ஆச்சரியமில்லை.

    திறந்தவெளி உயிரியல் பூங்காவுக்கு வந்திருந்து வாலிபர்களோ நடுத்தர வயது ஆண் மக்களோ தம் காதலிகளை உராய்ந்தபடி அவர்கள் இதம் காட்டும் புன்முறுவல்களைச் சேகரித்துப் பத்திரப் படுத்துவதிலும், மற்ற மணமானவர்களோ இந்த மிருகங்களுக்கு இருக்கும் சுதந்திரம்கூட நமக்கில்லையே, இப்படி ஆயுளுக்கும் அநியாயமாய் மாட்டினேமே எனத் தம் மனைவியரை ஏக்கமாய்ப் பார்க்கிறார்கள்.

    சீ, இது எப்பவும் கவர்டுப்பா, ஜனனி. நீ மட்டும் அவங்கள ஓட்டினா. இங்கே பார், இந்த ஐம்பது ரூபாய் உனக்கே உனக்கு. அர்ச்சனா தன் புதிய ஐம்பது ரூபாய் நோட்டைக் காட்டிச் சிரிக்கிறாள்.

    கமான் சாலஞ்ச்! ஜனனி முன்னால் விட்டிருந்த தன் நீண்டபின்னலைப் பின்னால் தள்ளி, தன் வெள்ளை ஷிபான் ஸாரியைச் சரிபடுத்திக் கைக் கண்ணாடியில் முகம் திருத்தியவளாய்க் கட்டை விரலை உயர்த்துகிறாள்.

    மெல்ல எழுந்து அந்த விடலைப் பிள்ளைகளின் கச்சேரி இடத்தை அணுகி, தன் பெரிய கண்களை மேலும் பெரிதாக்கி, சின்னக் கவர்ச்சிச் சிரிப்புடன், ஹலோ, உங்க மியூசிக் ட்ரூப் அபாரம். எக்ஸலண்ட்... என்று சொல்கிறாள்.

    தங்கள் கண் எதிரே தேவதையாய் நிற்கும் பெண்ணழகி சீறிப் பாயப் போகிறாள். அவளைப் பின் தொடர்ந்து பாடி வந்தது தப்பு, பொது இடத்தில் என்னவெல்லாம் திட்டுவாளோ, அன்றி அங்கொன்றும் இங்கொன்றுமாய்த் திரியும் போலீஸ்காரர்களை அழைத்து விடுவாளோ, உம் எப்படியும் இவளேச் சமாளித்துத் துரத்த வேண்டும்.

    ஏதேதோ மனத்தில் ஓடப் பதினைந்து இருபதான விடலைகள் தங்கள் கச்சேரியைத் தற்காலிகமாய் நிறுத்திப் பார்க்கிறார்கள்.

    இவளின் பாராட்டுக்கள் அவர்களை இசைச் சாரலில் நனைத்து விடுகிறது.

    தேங்க் யூ... தேங்க் யூ மேடம், கோரஸ். விஸில். சத்தம், ஸோலோவாய் ஜால்ரா தட்டும் ஒலி.

    யூ.ஸி. நீங்க நல்லாப் நல்லா பாடறீங்க, வாசிக்கிறீங்க. ஆன இப்படிப் போயிட்டே வாசிச்சா யாரால் கேட்க முடியும். அப்படி என்ட்ரன்ஸ் பக்கம் உக்காந்து வாசிச்சா வரவங்க, சாப்பிட வரவங்க கேட்டு ரசிப்பாங்களே. நடந்துட்டே வாசிக்கறதில் ஷேக் இருக்கு பாருங்க.

    எஸ் மேடம் வீ வில் டூ

    தேங்க் யூ... தேங்க் யூ வெரி மச் பார் யுவர் ஸ்வீட் மியூசிக்

    ஹாய் தேங்க்ஸ். கொன்னுட்டாடா, திக்குக் கொன்றாய் சரம் சரமாய் வார்த்தை புஷ்பங்கள் அவள்மீது வீசப்படுகிறது.

    விடலைகள், சின்னப் புழுதிப் படலத்தில் நல்ல இடம் தேடி மறைகிறது.

    வெற்றிப் பெருமிதத்துடன் நடந்து வந்த ஜானி, கர்ள்ஸ், இப்ப என்ன சொல்றீங்க. எப்படி நம்ம ஐடியா, கமான்... கமான். கிவ் மீ த பிப்டி... அர்ச்சனாவின் கையிலிருந்த ரூபாயைப் பார்த்துக் கொள்கிறாள்.

    அநியாயமாய் என் பணம் போச்சுடி.

    ஜனனி. எக்ஸலண்ட் ஐடியா. எப்படியும் அவங்க சில்லியாப் பேசப் போறாங்கன்னு பயந்தேம்பா.

    உம்... இந்தச் சுந்தரி நம்மோட வந்திருந்தா எப்படி இருக்கும், அவள ரெண்டு நாளா ரூம்லயும் காணேம். ஆபிஸுக்கும் லீவ் சொல்லாம, என்கிட்டேயும் சொல்லாம வில்லேஜுக்கு போயிட்டாளோ, அவ இருந்தா இவங்களைச் சமாளிச்சதைப் பார்த்துச் சந்தோஷப்பட்டிருப்பா இல்லப்பா.

    நாம இப்ப சுந்தரியப் பத்திப் பேச வந்திருக்கமா, ஜூவைப் பார்க்க வந்தமா... காலைலேந்து எத்தனை முறை சொல்லிட்டாப்பா இவ.

    வாங்கப்பா. அந்தப் பக்கம் நிறைய பர்ட்ஸ் இருக்காம். பார்த்துட்டே போவோம்.

    வெண் கொக்குகளையும் கருங் கொக்குகளையும் ஆஸ்திரேலிய கிளி ஜோடிகளையும் மதிற் சுவருக்குள் பொட்டல் காட்டில் திரியும் மான் இனங்களையும் பார்த்தபடி, சிங்க ராஜாவுக்காக உருவாகி வரும் செயற்கைக் கோட்டை, ஆறு பாலங்களையும் பார்த்தபடி நடக்கிறார்கள்.

    ஏம்பா, இதுல ரயில் விட்டா நல்லாயிருக்குமில்ல, நடத்து நடந்து காலை வலிக்குதுபா

    நீ எப்பவும் சோம்பேறி. உன்னால நாலு டெலிபோன் கால் அட்டெண்ட் செய்யவே முடியாது.

    உம்... உம்... எனக்கு அவசரம்பா. இப்ப என்ன செய்யறது. ஜனனி விரல் நீட்டிக் காட்டுகிறாள்.

    டாய்லெட் அங்கிருந்தது போயிருக்கலாமே அதைவிட்டு

    உம், இங்கொரு டாய்லெட் கட்டியிருக்கலாம்பா. ஒண்ணு செய்டி ஜனனி, இங்கு யாருமில்ல. நீ அப்படிப் போயிட்டு வா. யாராச்சும் வந்தா நாங்க பாத்துக்கறோம்.

    இந்தாடி இவளே... யாரையாவது அனுப்பித் தொலைச்சுடாதீங்கடி. அங்கே எந்த அனிமல்ஸும் இல்லப் போலிருக்கு.

    ஜனனி சேலையைத் தூக்கியபடி நடக்கிறாள்.

    சரி, சரி சீக்கிரம் வந்து தொலை.

    அருண் வந்திருந்தால் எப்படி இருந்திருக்கும். வரமாட்டேன்னுட்டாரே.

    ஜனனி பொட்டல் காடாய் நீண்டு போகும் வழியில் போய், பெரியவாத நாராயண மரத்தடியில் அவசரமாய் மறைகிறாள்.

    சேலையைச் சரிபடுத்தித் திரும்பியபோது,

    பள்ளத்தில், உடலெல்லாம் வெற்றுப் பிரதேசமாய் பெண்மையில் உறைவிடங்கள் வெளித் தெரிய முகத்தின் மீது பாறாங்கல் விழுந்ததால் சிதறிய இரத்தம் உறைந்து கறுத்து நசுங்கி, ஈக்களும் எறும்புகளும் மொய்க்க, அந்த இளம் பெண்ணின் பிரேதத்தில் இவள் நடுங்கிக் கூச்சலிடுகிறாள்.

    ஐயோ, இங்கே ஒரு பெண்ணை இங்கே ஒரு பொண்ண பொண்ண, கொலை கொலை செய்திருக்காங்கடி.

    கத்திக் கொண்டே வந்த ஜனனி மயக்கமாய்ச் சரிய கூட்டம் நிமிடமாய்ச் சேர்ந்து விடுகிறது.

    ஈக்களுக்கும் எறும்புக்களுக்கும் சரியான போட்டி.

    *****

    2

    மெரீனா பீச்சுக்குக் கொஞ்சம் தள்ளி, படகு மறைவில் அந்த வாலிபனும் இளம் பெண்ணும் நீண்ட நேரமாய்க் கதை பேசுகிறார்கள்.

    வாலிபனின் சில்மிஷங்கள் அந்த இளம் பெண் தவிர்த்துத் தடுத்து, போர்த்தப்பட இருக்கும் இருளில் அவன் முகம் பார்க்கிறாள்.

    இப்படிக் குறும்பு செய்தா நான் மறுபடி இங்க வரமாட்டேன்.

    என்ன குறும்புன்னு சொல்லு. அதைச் சொல்ல மாட்டே. சரி. இங்க, வரலன்னா சரி. என் ரூமுக்கு வந்துரு. அங்க யாரும் இருக்க மாட்டாங்க. நீதான் வர மாட்டேங்கறியே.

    "ஐய்ய,

    Enjoying the preview?
    Page 1 of 1